/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி---திருச்சி நான்கு வழிச்சாலைக்கு வரவேற்பு
/
காரைக்குடி---திருச்சி நான்கு வழிச்சாலைக்கு வரவேற்பு
காரைக்குடி---திருச்சி நான்கு வழிச்சாலைக்கு வரவேற்பு
காரைக்குடி---திருச்சி நான்கு வழிச்சாலைக்கு வரவேற்பு
ADDED : டிச 02, 2023 03:40 AM
காரைக்குடி காரைக்குடி --- திருச்சி இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சியில் இருந்து காரைக்குடி வரை உள்ள 108 கிலோமீட்டர் தொலைவிற்கு இருவழிச் சாலை அமைக்கும் பணி ரூ.374 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கியது.
சாலை பணி முடிவடைந்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு சீரானது. இந்நிலையில் தற்போது அதிக வாகனங்கள் பெருகி உள்ள நிலையில் திருச்சி காரைக்குடி நெடுஞ்சாலையில் அடிக்கடி தொடர் விபத்து நடந்து வருகிறது.
காரைக்குடி திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் விபத்தை தவிர்க்கவும் நான்கு வழி சாலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது திருச்சியில் இருந்து காரைக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.